காங்கிரஸ் மீது குறை கூறுவதை பொன் ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும்
மார்த்தாண்டம் மேம்பாலம் சேதமடைந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது பொன் ராதாகிருஷ்ணன் குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளரும்,விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பா ளருமான தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தோல்வி பயத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேவையில்லாமல் உண்மைக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
ஏதோ காங்கிரஸ்காரர்கள் மார்த்தாண்டம் மேம் பாலத்தை சதி செய்து சேதப்படுத்தியுள்ளதாக பொய் புகாரை கூறியுள்ளார். இதை அவர்' உடனடியாக வாபஸ்பெற வேண்டும்.அதேபோல் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான நான் தடயங்களை விட்டதாகவும் அழித்து அவர் பொய்யான ஒரு குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.
இதன்மூலம் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கா கவும் தான் செய்த தவறை மறைப்பதற்காகவும் காங்கிரஸ் கட்சியின் மீது புகார் கூறுகிறாரா பாலம் கட்டி முடித்து 4 ஆண்டு களுக்கு பிறகு பராமரிப்பு மாநில அரசுக்கு உரியது என்று கூறுகிறார். அவரு டைய வாதத்திற்கு வந்தாலும் இந்த பாலமானது 4 வருடத்திற்கான பாலம் தானா? என்ற சந்தேகம் எழுகிறது.மேம்பாலம் பற்றிய சேதாரம் பற்றி கேள்விப் பட்டதும் நான் அந்த இடத்தை பார்வையிட்டேன்.
அப்போது அங்கு சில அதிகாரிகள் இருந்ததா அப்போது பாலத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன் எதுவுமே தெரியாமல் காங்கிரஸ் கட்சியையும் அதன் தொண்டர்களையும் பம்புக்கு இழுப்பது பாஜகவுக்கு நல்லதல்ல என அவர் அறிக்கை விடுத்துள்ளார்.