மாநிலங்களவையில் – கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கோரிக்கை ! | கிங் நியூஸ் 24x7 | அரசியல்

Update: 2025-02-12 11:52 GMT

K. R. N. ராஜேஷ்குமார்


தர்­ம­பு­ரி­யி­லி­ருந்து நாமக்­கல் வரை செல்­லும் நான்கு வழி தேசிய நெடுஞ்­சா­லையை ஆறு வழிச் சாலை­யாக தரம் உயர்த்­திட ஒன்­றிய அரசு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும் – என மாநி­லங்­க­ள­வை­யில் நேர­மில்லா நேரத்­தில் கே.ஆர்.என்.இரா­ஜேஸ்­கு­மார் கோரிக்கை விடுத்­தார்.


தர்­ம­பு­ரி­யி­லி­ருந்து நாமக்­கல் வரை செல்­லும் நான்கு வழி தேசிய நெடுஞ்­சா­லையை ஆறு வழிச் சாலை­யாக தரம் உயர்த்­திட ஒன்­றிய அரசு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும், மேலும் புதுச்­சத்­தி­ரத்­தில் மேம்­பா­லம் அமைக்­க­வும் வேண்­டும் என்று கோரிக்­கையை - மாநி­லங்­க­ள­வை­யில் நேர­மில்லா நேரத்­தில் கே.ஆர்.என்.இரா­ஜேஸ்­கு­மார் குறிப்­பிட்­டார்.


தமிழ்­நாட்­டில் தர்­ம­பு­ரி­யில் இருந்து நாமக்­கல் வரை­யி­லான 119.5 கி.மீ நீள­முள்ள தேசிய நெடுஞ்­சாலை -44 பாதையை 4 வழிச்­சா­லை­யில் இருந்து 6 வழிச்­சா­லை­யாக மேம்­ப­டுத்­து­வ­தற்­கான அவ­ச­ரத் தேவையை இந்த மாமன்­றத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன். திட்­டம் தற்­போது விரி­வான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) கட்­டத்­தில் உள்­ளது. இந்த நெடுஞ்­சாலை தமி­ழ­கத்­தின் தொழில்­துறை மற்­றும் விவ­சாய மையங்­களை இணைக்­கி­றது, பெங்­க­ளூரு மற்­றும் கன்­னி­யா­கு­மரி இடையே சரக்­கு­கள் மற்­றும் மக்­க­ளின் போக்­கு­வ­ரத்தை எளி­தாக்­கு­கி­றது.


சேலத்­திற்­கும் – நாமக்­கல்­லுக்­கும் இடையே உள்ள பகுதி புதுச்­சத்­தி­ரம் ஊராட்சி வழி­யாக செல்­கி­றது, இது அதிக மக்­கள் தொகை அடர்த்­தி­யைக் கொண்­டுள்­ளது. இப்­ப­கு­தி­யில் பல தொழில்­துறை நிறு­வ­னங்­கள், பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் மற்­றும் விவ­சாய நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்றை கொண்­டுள்­ளது. இப்­ப­குதி மக்­கள், புதுச்­சத்­தி­ரம் பகு­தியை நம்­பியே உள்­ள­னர். எனவே,பத்து அபா­யத்­தைக் குறைப்­ப­தற்­கும், அதிக பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­கும் மேம்­பா­லம் அமைப்­பது அவ­சி­யம். எனவே, இதை டி.பி.ஆரில் சேர்க்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.


சேலம் முக்­கி­ய­மான போக்­கு­வ­ரத்து மைய­மாக உள்­ளது. இங்கு செயல்­பாட்டு விமான நிலை­யத்­தைக் கொண்­டுள்­ளது.


அதே­போல் நாமக்­கல் கோழிப்­பண்­ணை­க­ளின் மைய­மாக உள்­ளது. இந்­தி­யா­வின் முட்டை ஏற்­று­ம­தி­யில் 80% பங்­க­ளிக்­கி­றது, மேலும் இந்த முக்­கிய வர்த்­தக பாதை இந்த நெடுஞ்­சாலை வழி­யாக செல்­கி­றது. இந்த பகுதி தற்­போது கடு­மை­யான போக்­கு­வ­ரத்து நெரி­சலை எதிர்­கொள்­கி­றது, இதற்கு அவ­சர கவ­னம் தேவை.

எனவே, ஒன்­றிய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­ச­கம் ஒப்­பு­தல் அளித்து, நிதி ஒதுக்­கீட்டை விரைந்து முடிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­து­கி­றேன்.


பிராந்­தி­யத்­தின் பொரு­ளா­தா­ரம், பாது­காப்பு மற்­றும் ஒட்­டு­மொத்த வளர்ச்­சி­யில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை கருத்­தில் கொண்டு, இந்த விஷ­யத் திற்கு முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு நான் ஒன்­றிய அரசை கேட்­டுக்­கொள்­கி­றேன்.


Tags:    

Similar News