பிரஷ் இல்லாமல் உதயநிதிஸ்டாலின் ஓவியம் வரைவு
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பிரஷ் இல்லாமல் ஓவியம்;
By : King 24x7 Website
Update: 2023-11-27 04:57 GMT
உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு ஓவிய ஆசிரியா் உதயநிதி படத்தை பிரஷ் இல்லாமல் ஓவியம் வரைந்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், உதயநிதி ஸ்டாலின் படம் வரைய, திமுக கட்சி சின்னமான "உதயசூரியன் சின்னத்தாலேயே" திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்தார். உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், திமுக கட்சி சின்னமான "உதயசூரியன் சின்னம் " கொண்ட அட்டையை நீர் வண்ணத்தில் தொட்டு எட்டு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தைப் பார்த்த பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் "உதயசூரியன் சின்னத்தாலேயே" வரைந்தது அற்புதம் என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினர்.