மகளிர் உரிமை திட்டத்தில் திமுகவுக்கு சறுக்கல்
தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை கொடுத்துள்ளது. இது ஒரு ஏமாற்று வேலை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை புரிந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது பங்காரு அடிகளார் இறப்பு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என்று கூறிவிட்டு வெற்றி பெற்ற பின்னர் தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை கொடுத்துள்ளது. இது ஒரு ஏமாற்று வேலை எனவும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு இது பாதகமாக அமையும் எனவும் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதே தெரியவில்லை, வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணியை கேப்டன் முடிவு செய்து அதனை ஜனவரி மாதம் வெளியிடுவார் என தெரிவித்தார். முன்னதாக புதுக்கோட்டை நகர எல்லையான கருவேப்பிலையான் கேட் என்ற இடத்தில் பொன்னாடை போற்றி கும்ப மரியாதை கொடுத்தனர் தேமுதிக நிர்வாகிகள்.