அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் !

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிக்கை!

Update: 2024-12-07 08:17 GMT
ஸ்டாலின் / செந்தில் பாலாஜி 

சென்னை, டிச. 7 –

    



“தொழி­ல­தி­பர் அதா­னியை முத­ல­மைச்­ சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சந்­திக்­க­வும் இல்லை. அந்­தத் தனி­யார் நிறு­வ­னத்­து­டன் தி.மு.க. ஆட்­சி­யில்        ஒப்­பந்­தம் போட­வும்இல்லை. அ.தி.மு.க. ஆட்சி ஒப்­பந்­தத்­தில் கூறியயூனிட்­டுக்கு 7.01 சூரிய ஒளி மின்­சார கட்­ட­ணத்தை எதிர்த்து தி.மு.க. ஆட்­சி­யில் தொடர்ந்த வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது” என்­றும் “அவ­தூறு பரப்­பு­வோர் மீது சட்­ட ­பூர்­வ­மா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்­றும் குறிப்­பிட்டு மின்­சா­ரம் மற்­றும் மது­வி­லக்கு ஆயத்­தீர்வை அமைச்­சர் வி.செந்­தில்பாலாஜி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்










அவ­ரது அறிக்கை வரு­மாறு:–

தொழி­ல­தி­பர் அதானி அவர்­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் சந்­தித்­தது போல­வும், அதிக விலை­கொ­டுத்து அதா­னி­யி­ட­மி­ருந்து சூரிய ஒளி மின்­சா­ரம் பெற ஒப்­பந்­தம் போட்­டி­ருப்­ப­து­போ­ல­வும் தொடர்ந்து                         எதிர்க்­கட்­சி­க­ளும், ஊட­கங்­க­ளும் கற்­ப­னை­யான தக­வ­லைக் கட்­டுக்­க­தை­கள் போல் வெளி­யிட்டு - தெரி­வித்து வரு­வ­தற்­குக் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அதா­னி­யைச் சந்­திக்­க­வும் இல்லை. அதானி நிறு­வ­னத்­து­டன் நேர­டி­யா­கச் சூரிய ஒளி­மின்­சா­ரம் பெற எந்த ஒப்­பந்­த­மும் போட­வும் இல்லை என்­ப­தைத்                        தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.  அ.தி.மு.க. ஆட்­சி­யில்                  நிர்­வாக ரீதி­யா­க­வும், நிதி­நி­லைமை ரீதி­யா­க­வும் முற்­றி­லும் சீர்­கு­லைந்­தி­ருந்த தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்தை அடுத்­த­டுத்த நிர்­வா­கச் சீர்­தி­ருத்த மற்­றும் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை மூலம், இன்­றைக்­குத் தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­தைத் தலை­நி­மிர வைத்­துள்­ள­வர் எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

அதைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­மல் இப்­படி அடிப்­படை உண்மை கிஞ்­சித்­தும் இல்­லாத பொய்க் குற்­றச்­சாட்­டு­களை எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து பரப்பி வரு­வது அர­சி­யல் பண்­பாடு அல்ல!

“ஒவ்­வொரு மாநி­ல­மும் ஆண்­டு­தோ­றும் நுகர்­கின்ற மொத்த மின்­சா­ரத்­தில் குறிப்­பி­டத்­தக்க அளவு புதுப்­பிக்­கத்­தக்க மின் சக்­தி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும். தவ­றும்­பட்­சத்­தில், அப­ரா­தம் செலுத்த வேண்­டும்” என்ற ஒன்­றிய அர­சின் கட்­டாய விதி­யின் அடிப்­ப­டை­யில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்­டு­க­ளில் 2000 மெகா­வாட் சூரிய ஒளி மின்­சா­ரத்­தைக் கொள்­மு­தல் செய்ய தமிழ்­நாடு மின்­சார வாரி­யம் ஒன்­றிய அர­சின் சோலார் எனர்ஜி கார்ப்­ப­ரே­ஷன் ஆஃப் இந்­தியா (SECI)வுடன் ஒப்­பந்­தம் செய்­துள்­ளதே தவிர, எந்­த­வொரு தனி­யார் நிறு­வ­னத்­து­ட­னும் அல்ல!


முறை­கே­டும் இல்லை விதி­முறை மீறல்­க­ளும் இல்லை!

இந்­தி­யா­வில் உள்ள பிற மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மின்­சார வாரி­யங்­க­ளைப் போல தமிழ்­நாடு மின்­சார வாரி­ய­மும் ஒன்­றிய அர­சின்சோலார் எனர்ஜி கார்ப்­ப­ரே­ஷன் ஆஃப் இந்­தியா(SECI) நிறு­வ­னத்­து­டன் மட்­டுமே மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்து வரு­கின்­றது. குறிப்­பாக, திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு அமைந்­தப் பிறகு, எந்த தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் மின்­சார வாரி­யம் நேர­டி­யாக எவ்­வி­த­மான ஒப்­பந்­த­மும் செய்து கொள்­வ­தில்லை.

இந்த ஒப்­பந்­தங்­கள் அனைத்­தும், மாநி­லத்­தின் மின் தேவை­யைப் பூர்த்தி செய்­ய­வும், ஒன்­றிய அர­சால் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள மர­பு­சாரா கொள்­மு­தல் (RPO) இலக்­கு­களை அடை­வ­தற்­கும் மாண்­பமை தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் ஒப்­பு­தல் பெற்று செய்­யப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளா­கும். இதில், எவ்­வித முறை­கே­டும், விதி­முறை மீறல்­க­ளும் இல்லை.

இன்­னும் சொல்­லப் போனால், ஒன்­றிய அர­சின் புதுப்­பிக்­கத்­தக்க மின்­சா­ரத்­தைப் பெறு­வது குறித்த கட்­டாய விதி எது­வும் இல்­லாத கால­கட்­டத்­தில் அ.தி­.மு.க. ஆட்­சி­யில்அதானி லிமி­டெட்நிறு­வ­னம், தங்­க­ளுக்கு சொந்­த­மான ஐந்து நிறு­வ­னங்­கள் மூல­மாக, 648 மெகா­வாட் திறன் கொண்ட சூரிய சக்­தியை உற்­பத்தி செய்­வ­தற்­கான எரி­சக்தி கொள்­மு­தல் ஒப்­பந்­தத்­தில் 04/07/2015 அன்று, கையெ­ழுத்­திட்­டது.

இந்த ஒப்­பந்­தத்­தின்­படி, ஒரு யூனிட்­டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்­பத்தி ஆலை­கள் இயக்­கப்­பட வேண்­டும் என­வும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அதானி நிறு­வ­னம் 31/03/2016க்கு முன் பல்­வேறு தேதி­க­ளில் 313 மெகா­வாட் மின்­சா­ரத்தை இயக்கி, ஒப்­பந்­தப்­படி ஒரு யூனிட்­டுக்கு ரூ.7.01 உரிமை கோரி­யது. 31/03/2016 தேதிக்­குப் பிறகு, அதா­வது கிட்­டத்­தட்ட 6 மாதங்­கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகா­வாட் மின்­சா­ரம் வழங்­கி­யது.


குற்­றச்­சாட்டு மறுப்பு!


31/03/2016க்குப் பிறகு வழங்­கப்­பட்ட மின்­சா­ரத்­திற்கு, ஒரு யூனிட்­டுக்கு ரூ.7.01 வேண்­டு­மென அதானி நிறு­வ­னம் கோரி­யது.. மேலும் 22/03/2016 முதல் மின்­சா­ரம் வழங்­கிட தயா­ராக இருந்­த­தா­க­வும், தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக்­க­ழ­கத்­தின் (TANGEDCO) முழு செய­லற்­ற­தன்­மை­யின் கார­ண­மாக மின்­சா­ரம் வழங்க முடி­ய­வில்லை என­வும் திரித்து கூறி­யது. ஆனால், தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக்­க­ழ­கம், அதானி நிறு­வ­னத்­தின் குற்­றச்­சாட்டை மறுத்து, ஒப்­பந்­தப்­படி ஒரு யூனிட்­டுக்கு ரூ.5.10 கட்­ட­ணத்தை கொடுக்க முடி­யு­மென தெரி­வித்­தது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் அதானி நிறு­வ­னம், தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்­றும் MP எண். 26(2020) என இரு மனுக்­களை தாக்­கல் செய்­தது. ஆயி­னும், தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் 20/07/2021 அன்று, அதானி நிறு­வ­னம் தாக்­கல்செய்த மனுக்­களை தள்­ளு­படி செய்­தது.

தமிழ்­நாடுமின்­சார ஒழுங்­கு­ முறை ஆணை­யத்­தின் இந்த உத்­த­ரவை எதிர்த்து, அதானி நிறு­வ­னம், மேல்­மு­றை­ யீட்டு தீர்ப்­பா­யம் முன் (APTEL) மேல்­மு­றை­யீடு செய்­தது (எண்.287–2021). மேல்­­முறை­யீட்டு தீர்ப்­பா­யம் அந்த மேல்­மு­றை­யீட்டை அனு­ம­தித்து, யூனிட்­ டுக்கு ரூ.7.01 கட்­டண விகி­தத்தை 7/10/2022அன்று அங்­கீ­ க­ரித்­தது.

மின்­சா­ரத்­திற்­கான மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யத்­தின் இந்த உத்­த­ர­வின் அடிப்­ப­டை­யில், அதானி நிறு­வ­னம், ரூ.568 கோடிக்­கான பில்­களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்­ட­லில் சமர்ப்­பித்­தது. PRAPTI போர்ட்­ட­லில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பில்­களை75 நாட்­க­ளுக்­குள் செலுத்த வேண்­டு­மென விதி உள்­ளது. ஆயி­னும், மேல்­மு­றை­யீட்டு ஆணை­யத்­தின் இந்த உத்­த­ரவை எதிர்த்து, தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக் கழ­கம் 2022ல், சிவில் மேல்­மு­றை­யீட்டு முறை­யில் (எண். 38926), இந்­திய உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தது.. மின்­சா­ரத்­திற்­கான மேல்­மு­றை­யீட்டு ஆணை­யத்­தின் இந்த உத்­த­ர­வுக்கு இடைக்­கா­லத் தடை விதிக்க கோரி­யது. 17/02/2023 அன்று, உச்­ச­நீ­தி­மன்­றம் தடை விதிக்க மறுத்­தது. அதன் கார­ண­மா­கவே தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக் கழ­கம் ரூ.568 கோடி செலுத்­தி­யது. தமிழ்­நாடு மின் உற்­பத்தி பகிர்­மா­னக் கழ­கம் தாக்­கல் செய்த மேல்­மு­றை­யீடு, (மேல்­மு­றை­யீட்டு எண் 1274 மற்­றும் 1275 - 2023) இன்­ன­மும் உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதில் தமிழ்­நாடு அர­சின் நலனை- பகிர்­மா­னக் கழ­கத்­தின் நல­னைக் காப்­ப­தற்கு எங்­க­ளது வலு­வான வாதத்தை எடுத்­து­ரைக்க உள்­ளோம்.


அரசை குறை கூறு­வது  நியா­ய­மா­காது!

அதானி நிறு­வ­னத்­தி­டம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்­சா­ரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்­ப­டை­யில் பெற 2014ல் ஒப்­பந்­த­மிட்ட அரசை விட்­டு­விட்டு, 2021ம் ஆண்டு பொறுப்­பேற்ற உடனே தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தில் அதானி நிறு­வ­னத்­துக்கு எதி­ரான வழக்கை திறம்­பட நடத்­தியை திரா­விட முன்­னேற்­றக் கழக அரசை- மின்­சார வாரி­யத்­திற்கு சாத­க­மாக, அதா­வது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்­சா­ரம் என்­னும் அள­விற்கு சாத­க­மான ஆணை­யைப் பெற்ற அரசை குறை சொல்­வது எந்த வகை­யி­லும் நியா­ய­மா­காது. அத­னால்­தான் அறிக்­கை­கள் விட ஆர்­வம் இருக்­க­லாம். ஆனால் அதற்கு அடிப்­படை புரி­த­லும் அறி­வும் இருக்க வேண்­டும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

மேலும், தமிழ்­நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு கால­மும் மின்­சார கொள்­மு­தல் குறித்து எந்த ஒரு தனி­யார் நிறு­வ­னத்­து­ட­னும் எவ்­வித ஒப்­பந்­த­மும் செய்து கொள்­ள­வில்லை என்­பதை தெள்­ளத் தெளி­வாக தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கின்­றேன். அதா­வது 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க.அரசு நேர­டி­யா­கவே தனி­யார் நிறு­வ­னத்­து­டன் சூரிய ஒளி மின்­சா­ரத்தை யூனிட் ரூபாய் 7.01 என்ற அள­வில் நீண்ட காலம் பெறு­வ­தற்கு ஒப்­பந்­தம் போட்­டதை விட, கழக ஆட்­சி­யில் மிகக் குறைந்த அள­வில், யூனிட் ரூபாய் 2.61 மட்­டும் என்ற ஒன்­றிய அர­சின் கட்­டாய விதி­யின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே ஒப்­பந்­தம் போடப்­பட்­டுள்­ளது. அது­வும் தனி­யார் நிறு­வ­னத்­து­டன் அல்ல; ஒன்­றிய அர­சின் நிறு­வ­னத்­து­டன்­தான் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது.

மின் உற்­பத்­தி­யி­னைப் பொருத்­த­வ­ரை­யில், தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­திற்­குச் சொந்­த­மான அனைத்து மின் நிலை­யங்­க­ளி­லி­ருந்­தும் முழு­மை­யான அள­வில் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­பட்டு வரு­கி­றது. மாநி­லத்­தின் மின்­சா­ரத் தேவை­யி­னைப் பொறுத்து, நடுத்­தர மற்­றும் நீண்ட கால ஒப்­பந்­தங்­கள் அடிப்­ப­டை­யில் யூனிட் ஒன்­றிற்கு ரூ.3.45 முதல் 5.31 வரை தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து ஒளிவு மறை­வற்ற ஒப்­ப­ந்தப்­புள்ளி வாயி­லாக மாண்­பமை தமிழ்­நாடு மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் அனு­ம­தி­யு­டன் மின்­சா­ரம் கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­கி­றது.

அடிப்­ப­டை­யற்ற அறிக்கை கண்­டிக்­கத்­தக்­கது!

1x800 மெகா­வாட் திற­னுள்ள வட­சென்னை அனல்­மின் திட்­டம், நிலை-3, கடந்த 27.6.2024 அன்று, தனது முழு நிறு­வுத்­தி­ற­னான 800 மெகா­வாட் மின் உற்­பத்­தியை வெற்­றி­க­ர­மாக எட்­டி­யுள்­ளது. இது­வரை சுமார் 750 மில்­லி­யன் யூனிட் மின்­சா­ரம் வட­சென்னை அனல் மின் திட்­டம், நிலை-3-இல் இருந்து உற்­பத்தி செய்­யப்­பட்டு மக்­க­ளுக்கு பயன்­பட்­டுள்­ளது. இது­போன்ற அடிப்­ப­டைத் தக­வல்­க­ளைக்­கூட அறி­யா­த­வர்­கள் போல் அறிக்­கை­கள் வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வது கண்­டிக்­கத்­தக்­கது!


மின்­கட்­டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்­த­மான குற்­றச்­சாட்­டை­ யும் முன்­வைக்­கி­றார்­கள். எப்­போது மின் கட்­டண உயர்வை ஏற்­ப­டுத்­தி­னா­லும், ஏழை எளிய மக்­கள் பாதிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தில் கண்­ணும் கருத்­து­மா­கச் செயல்­ப­டு­வது திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு மட்­டுமே. இலட்­சக்­­கணக்­கான ஏழை எளிய மக்­க­ளின் வீடு ­க­ளுக்­கான கட்­டண உயர்வை தமிழ்­நாடு அரசே ஏற்­றுக்­கொண்டு மின் மானி­ய­மாக வழங்க ஆணை வெளி­யிட்டு, வீடு­க­ளுக்­கான மின்­கட்­டண உயர்வே இல்­லா­மல் பார்த்­துக்­கொண்­ட­வர் எங்­கள் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மட்­டுமே என்­பதை இந்­த­நே­ரத்­தில் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.

ஏழை எளிய மின் நுகர்­வோர் பாதிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தற்­காக, கடந்த 2023–-24 நிதி­யாண்­டில் மட்­டும், தமிழ்­நாடு அரசு 17,117 கோடி ரூபா­யினை மானி­ய­மா­கத் தமிழ்­நாடு மின் உற்­பத்தி மற்­றும் பகிர்­மா­னக் கழ­கத்­திற்கு வழங்கி, தமிழ்­நாட்டு மக்­களை தாய் உள்­ளத்­து­டன் நடத்­திச் செல்­ப­வ­ரும் எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள் மட்­டுமே என்­பதை இந்தநேரத்­தில் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.

அதை­விட முக்­கி­ய­மாக மின்­கட்­டண வரு­வாய் அதி­க­ரிப்பு ஒரு­பு­றம் என்­றா­லும், விலைக்­கு­றை­வான மின்­கொள்­மு­தல், செல­வு­க­ளைப் பெரு­ம­ள­வில் கட்­டுப்­ப­டுத்­தி­யது, உள்­நாட்டு மின் உற்­பத்தி என நிர்­வா­கத் திறன்­மிக்க நட­வ­டிக்­கை­கள் கழக அர­சில்­தான் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அந்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் மூலம் மின்­வா­ரி­யத்­திற்கு ஏற்­பட்ட நட்­டங்­கள் குறைக்­கப்­பட்­டுள்­ள­தும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில்­தான் என்­பதை, அறி­யா­மை­யில் உள­றிக் கொட்­டும் “சில” “அறிக்கை அர­சி­யல்­வா­தி­கள்” புரிந்­து­கொள்ள வேண்­டும் என கேட்­டுக்­கொள்­கி­றேன்!

ஆகவே உண்மை இவ்­வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்­றிய அர­சின் கட்­டா­யத்­தின் அடிப்­ப­டை­யில், ஒன்­றிய அரசு நிறு­வ­ன­மான சூரிய மின்­சக்தி கழ­கத்­தி­ட­மி­ருந்து இந்­தி­யா­வில் உள்ள பிற மாநி­லங்­க­ளைப் போலவே சூரிய ஒளி மின்­சா­ரத்­தைப் பெறு­வ­தற்­கா­கத் தமிழ்­நாடு மின்­சார வாரி­ய­மும் ஒப்­பந்­தம் செய்­துள்ள நிலை­யில், அது சம்­பந்­த­மாக 2024-ஆம் ஆண்டு நிறு­வ­னத்­தின் பிர­தி­நி­தியை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் சந்­தித்­த­தா­கக் கூறு­வது முற்­றி­லும் தவ­றா­னது மட்­டு­மல்­லாது, மக்­க­ளி­டம் வேண்­டு­மென்றே பொய்­யான தக­வல்­க­ளைக் கொண்­டுச் சென்று தமிழ்­நாட்டு மக்­க­ளைத் திசை­தி­ருப்­பும் முயற்­சி­யா­கவே கருத வேண்டி உள்­ளது.

அ.தி.மு.க. ஆட்­சி­யில் ஒப்­பந்­தம் போடப்­பட்­ட­தை­யும் மறைத்து- உச்­ச­நீ­தி­மன்ற உத்­த­ர­வை­யும் அறி­யா­த­வர்­கள் போல்- அ.தி.மு.க. அர­சின் மின்­கொள்­மு­தலை திமுக அர­சின் மின் கொள்­மு­தல் முடிவு போல் சித்­த­ரிக்க துடிக்­கும் அரை­குறை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அதானி நிறு­வ­னத்­தையோ- அதி­மு­க­வையோ விமர்­சிக்க துணிச்­சல் இல்­லா­மல் தவிக்­கி­றார்­கள் என்­பது மட்­டும் புரி­கி­றது. அதற்­குள்­தான் அ.தி.மு.க-. பா.ஜ.க. கூட்­டணி திரை­ம­றை­வில் ஒளிந்து கிடக்­கி­றது.

பொய்த் தக­வல் பரப்­பி­னால்  கடும் நட­வ­டிக்கை!

முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யில் நடை­பெ­றும் திரா­விட மாடல் அர­சில், மின்­வா­ரி­யம் நிர்­வாக ரீதி­யா­க­வும், நிதிச் சுமை­யி­லி­ருந்­தும் சீர­டைந்து, ஏழை எளிய நுகர்­வோ­ரின் நல­னைப் பிர­தா­ன­மாக எண்ணி நல்­லாட்­சிக்கு இலக்­க­ண­மா­கச் செயல்­பட்டு வரு­வதை பொறுத்­துக்­கொள்ள இய­லா­மல், “அவ­ரைச் சந்­தித்­தார்” “இந்­தத் தனி­யார் நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் போட்­டார்” என்­றெல்­லாம் பொய்த் தக­வல்­க­ளைத் தொடர்ந்து பரப்­பு­வார்­க­ளே­யா­னால், அவர்­கள் மீது கடும் சட்­ட­பூர்வ நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

இவ்­வாறு அமைச்­சர் வி. செந்­தில் பாலாஜி தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

Tags:    

Similar News