திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆர் எஸ் பாரதி
Update: 2024-12-05 13:11 GMT
சென்னை: திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும் , கட்சி நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கிணங்க கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக் கூடாது. கட்சித் தலைமையின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்.எஸ்.பாரதி