அலங்காநல்லூரில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அலங்காநல்லூரில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-01 10:48 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி பழனிவேல், பொதுச் செயலாளர் பரத் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி, மதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்படுவது, ஓட்டு சேகரிப்பது குறித்து அவசிக்கப்பட்டது. நிர்வாகிகள் கார்த்திகேயன், சடையன், பால்பாண்டி, அழகர்சாமி, முரளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.