தமிழ்நாட்டில் GDP 2022-23ம் ஆண்டில் ₹23.64 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. - செல்வப்பெருந்தகை
Update: 2024-12-11 11:42 GMT
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் GDP 2022-23ம் ஆண்டில் ₹23.64 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. இது தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுக்கு பாராட்டுகள். எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் பெறும், வரலாறு படைக்கும் என செல்வப்பெருந்தகை மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார் .