டங்ஸ்டன் விவகாரம்; தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது: அண்ணாமலை
டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகமாடுவதாக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
By : King 24x7 Desk
Update: 2024-12-10 05:39 GMT
டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகமாடுவதாக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் போராடியதற்கு பின்பு எதிர்ப்பதை போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது. சுரங்கம் குறித்து தமிழக பாஜக கடிதம் எழுதியதும் சட்டமன்றத்தில் பெரிய நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். டங்ஸ்டன் விவகாரத்தில் ராஜினாமா செய்வேன் எனக்கூறும் முதலமைச்சர், டாஸ்மாக் விவகாரத்தில் ராஜினாமா செய்யலாம். நானும், எல். முருகனும் 12-ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி என்றார்.