அடுத்த தெலுங்கானா ஆளுநராக எச்.ராஜா நியமனமா..?

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.;

Update: 2024-03-18 10:39 GMT
அடுத்த தெலுங்கானா ஆளுநராக எச்.ராஜா நியமனமா..?
அடுத்த தெலுங்கானா ஆளுநர் யார்..?
  • whatsapp icon

தெலுங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்த நிலையில், அந்த பொறுப்புக்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி ஆளுநர் பொறுப்புக்கு தமிழகத்தில் இருந்து யார் தகுதியானவர்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மரியாதையும், கன்னியமுமிக்க ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ய காரணம் மக்களவை தேர்தல் தான் என்று கூறப்படுகிறது.

நடப்பு மக்களவையின் பதவிக்காலம் முடியும் நிலையில் லோக் சபா தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் முதற்கட்ட தேர்தல் தொடங்குகிறது. தேர்தலுக்கு தயாராகி வரும் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து வருகின்றன. பாஜக இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி முதல் வடமாநில முதலமைச்சர்கள் வரை முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடுகிறது. இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் தமிழகத்தில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வாய்ப்பு பாஜவின் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன் அல்லது எச். ராஜாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர்களில் இருவரை தெலுங்கானா ஆளுநராக அறிவிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவெடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. 

Tags:    

Similar News