அண்ணாமலை நடை பயணத்தையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு.!
பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தையொட்டி வைக்கப்பட்ட கட்சி பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-29 10:01 GMT
கிழிக்கப்பட்ட பேனர்
தமிழகத்தில் என் மண் என் மக்கள் எனும் தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக 49 வது நாளான நேற்று இரவு திருச்செங்கோடு பகுதியில் சி.ஹெச்.பி காலனி பகுதியில் தொடங்கி, தேர் வீதி வழியாக, அண்ணா சிலை வரை நடை பயணம் மேற்கொண்டு, பின்னர் அங்கு பிரச்சார வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிகழ்வையொட்டி திருச்செங்கோடு நகர மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜகவினர் நகரின் பல பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சி நிறைவுற்ற நிலையில், இன்றைய தினம் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பாஜகவினரின் 10க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருப்பது, அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இதுவரை காவல் நிலையத்தில் எந்த புகார் அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.