‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் இல்லை!
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின்4 ஆயிரத்து 120 சட்டப்பேரவைத்தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவி களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் குழு கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கையை அளித்தது.
மக்களவை, மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்,ஒரே வாக்காளர்பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் டிச.15 அன்று தாக்கல்செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,புதுப்பிக்கப் பட்ட மக்களவை அலுவல் பட்டியல் நேற்று காலை வெளி யிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி களின் பலத்த எதிர்ப்பால்,கண்ட னத்தால் இன்றைய தினத்துக் கான அலுவல் பட்டியலில் இருந்து இந்த இரண்டு மசோதாக்களும் நீக்கப்பட்டுள்ளன. நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் 20ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்யாமல் பின் வாங்கியுள்ளது பா.ஜ.க. அரசு.