ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கு செயல்: திருமாவளவன்

ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கு செயல் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-06 08:09 GMT

thirumavalavan

ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கு செயல் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. வழக்கம் போல பேரவைக் கூடியதும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருநது வெளியேறினார். இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையை வாசிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய கீதத்தை வைத்து ஆளுநர் அரசியல் செய்து ஆதாயம் பெற நினைக்கிறார். ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கு செயல். உரையை படிக்காமல் தவிர்க்க வேண்டும் என்ற திட்டத்தோடுதான் ஆளுநர் ரவி வந்துள்ளார். ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார் ரவி. நிகழ்ச்சி தொடங்குவதும் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் பாடுவதும் தமிழ்நாட்டின் மரபு. அரசியல் சட்டம், தேசிய கீதத்தை அவமதிக்கும் தேவை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இல்லை. அண்ணா பல்கலை. வழக்கை வைத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அண்ணா பல்கலை. விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான செயல் என்றும் கூறினார்.

Tags:    

Similar News