திருமாவளவனை கூட்டணி பயமுறுத்துகிறதா?: தமிழிசை சவுந்தரராஜன்

முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-12-06 07:35 GMT
திருமாவளவனை கூட்டணி பயமுறுத்துகிறதா?: தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

  • whatsapp icon

சென்னையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், கருவியாக காய் நகர்த்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவராக இருக்கிறாரா? அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா? அம்பேத்கரின் பெயரை வைத்து தன்னை காய் நகர்த்துகிறார்கள் என்றால் காய் நகர்த்தும் அளவிற்கு தான் பலவீனமாக இருக்கிறேன் என்று திருமாவளவன் சொல்கிறாரா? இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? இல்லை கூட்டணியை சிறப்பு செய்கிறாரா? நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார். 2 பேரையுமே தவறிழைத்தவர்களாக தான் நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News