கவர்னரின் சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க கூடாது: வி.சி.க.
விடுதைல சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்ததை வைத்து அவருக்கு வலிய வாழ்த்துச் சொல்லி அரசியல் செய்கிறார் அண்ணாமலை. ஏற்கனவே, தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட சாட்டையடியால், ஏற்பட்ட விமர்சனங்களால் சற்று சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார். நடிகர் விஜய் திராவிட மாடல் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்ததால், அவரால் திமுகவிற்கு கோரிக்கை வைக்க முடியவில்லை. ஆகவே ,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரத்தை முன்னிட்டு கவர்னரை சந்தித்து முறையிட்டிருக்கிறார் . இது அவரது அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது. பா.ஜ.க. சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் பேராசை*. அதனால் தான் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றார். மாணவிக்கு நீதிகேட்டு போன விஜய் மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம் என்று தெரிவித்தார்.