'வி' என்பது வெற்றி சின்னம்: விஜயபிரபாகரன்
'வி' என்பது வெற்றி சின்னம் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 13:50 GMT
வாக்கு சேகரித்த விஜய பிரபாகரன்
விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வலையங்குளம், வலையபட்டி, ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டிய பட்டி, சூரக்குளம், பரம்பு பட்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில்திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,
ஒன்றிய செயலாளர் முருகன், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.MLA ராஜன் செல்லப்பா கூறுகையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அப்பாவை போல் நல்ல மனம் படைத்தவர் கட்டிடக்கலை பட்டம் படித்துள்ளார். வெற்றி கூட்டணிக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார்