விக்கிரவாண்டி தாசில்தார் பொறுப்பேற்பு
விக்கிரவாண்டி தாசில்தாராக யுவராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்
By : King 24x7 Website
Update: 2023-10-26 05:06 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பணிபுரிந்த தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், திண்டிவனம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் புதிய தாசில்தாராக யுவராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தாசில்தாருக்கு மண்டலதுணை தாசில்தார் ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், வருவாய் ஆய்வாளர் கள் தெய்வீகன், நாகராஜன், மாரியம்மாள், வினோத் கிராம நிர்வாக அலுவலர், சங்க தலைவர் சவுந்தர்ராஜன், மற்றும் அலுவலக பணியாளர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.