அலங்காநல்லூரில் விசிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், புதிய முகாம் பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், புதிய முகாம் பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அழகுமலை, தொகுதி அமைப்பாளர் மணிமொழியன், மாவட்ட அமைப்பாளர்கள் வடகள்பூமி, காமராசு, அதிவீரபாண்டியன், மாவட்ட துணை அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் புதிய முகாம் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசினர்.
தொடர்ந்து மதுரை மேற்கு ஒன்றிய மகளிரணி சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர். இதில் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய செயளாலர் ராதா, மகளிரணி ஒன்றிய செயலாளர் காமாயி, கல்லணை தன்மான செல்வி, ஒன்றிய துணை செயலாளர் பாப்பத்தி, உசிலம்பட்டி பேச்சி, சேடபட்டி முனியம்மாள், உள்ளிட்ட மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்.