திமுக இளைஞரணி இருசக்கர வாகன குழுவினருக்கு வரவேற்பு
திமுக இளைஞரணி மாநாட்டு இருசக்கர வாகன பிரச்சார குழுவினருக்கு வரவேற்பு
By : King 24x7 Website
Update: 2023-11-27 04:13 GMT
சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டிற்க்காக திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இரு சக்கர வாகன பிரச்சாரம் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சேலம் வீரபாண்டி ஒன்றியம் வந்த இரு சக்கர பேரணி குழுவினரை சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் மிகச்சிறப்பான வரவேற்பு கொடுத்து புத்துணர்ச்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய,ஊராட்சி கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.