செங்கல்பட்டு அருகே விபத்து- கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-26 10:32 GMT
செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னை நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.