மாங்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-04 09:32 GMT
சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாங்காடு கங்கை அம்மன் கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாங்காடு நகராட்சி ஆணையர் நந்தினி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆய்வுக்கு சென்றபோது ஊழியர்கள் தப்பி ஓடினர். 3 டன் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.