இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு!!

Update: 2025-01-06 06:19 GMT

accident

கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கியில் புல்லுப்பாறை அருகே 30 அடி பள்ளத்தில் வளைவில் திரும்பும் போது அரசு பஸ் விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காயம் அடைந்தவர்களை மீட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News