திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!

Update: 2025-01-07 07:15 GMT

Tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்படும் ஆழ்வார் திருமஞ்சன பணி நடந்தது. இதனால் கோவிலில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். திருப்பதி கோவிலில் நேற்று 54 ஆயிரத்து 180 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17,689 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 16 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 12 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News