ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடியதால் திமுகவினர் மீது வழக்குப்பதிவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது குறித்த பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கள நிலவரத்தை ஆய்வு செய்து போலீஸ் அனுமதி தரும். யார் போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். நேற்று அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.