பெரியார் குறித்து சீமான் அநாகரிக பேச்சு; அமைச்சர் சேகர்பாபு கண்டனம்!!

Update: 2025-01-09 07:16 GMT

Sekarbabu

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்று சீமான் பேசுகிறார். வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல. கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது. மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன் பெயர் அடையாளப்படும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறார் என்று அவர் கூறினார்.

Similar News