பெரியார் பற்றி அவதூறு; சீமான் மீது போலீசில் புகார்!!
By : King 24x7 Desk
Update: 2025-01-09 07:59 GMT
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவிகவினர் புகார் அளித்துள்ளனர். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகம் புகார் தெரிவித்துள்ளது. பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சீமான் பேசி வருகிறார். பொய்யான செய்திகளை தீய எண்ணத்துடன் சீமான் பரப்பி வருகிறார். பெரியார் பேசாததை பேசியதாக கூறி சீமான் அவதூறு பரப்புகிறார் என புகாரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.