தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!!
By : King 24x7 Desk
Update: 2025-01-09 07:20 GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.