அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ; 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

Update: 2025-01-08 06:58 GMT

Wildfire

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

Similar News