நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 53 பேர் உயிரிழப்பு!!

Update: 2025-01-07 06:49 GMT

நிலநடுக்கம்

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Similar News