44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Update: 2026-01-25 06:12 GMT

77வது குடியரசு தினத்தை ஒட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருது பெறுவோருக்கு தலா பத்து கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். மெச்சத்தக்க நுண்ணறிவு, மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் 43 காவல் அதிகாரிகள், தனிப்பிரிவு உதவியாளருக்கு பதக்கம் வழங்கப்படும். 44 பேருக்கும் வேறு ஒரு நாளில் நடைபெறும் விழாவில் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Similar News