அதிமுக, பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Update: 2026-01-21 08:26 GMT

மக்கள் விரும்பு நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பியூஷ் கோயலை சந்திக்க நட்சத்திர விடுதிக்கு டி.டி.வி. தினகரன் செல்கிறார்.

Similar News