மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்!!
By : King 24x7 Desk
Update: 2026-01-19 06:06 GMT
மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் ஜனவரி 23ல் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக ஜனவரி 21ம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல். ஜனவரி 22ம் தேதி என்.டி.ஏ. கூட்டணியில் மற்ற கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின், ஜன.23ல் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.