திமுக-காங். கூட்டணியை சிதைக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது: செல்வப்பெருந்தகை
By : King 24x7 Desk
Update: 2026-01-31 16:05 GMT
திமுக-காங். கூட்டணியை சிதைக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது என தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் 'தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ராகுல், கனிமொழி ஆலோசனை நல்ல சந்திப்பாக அமைந்திருந்தது. பிப்ரவரி இறுதியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க கார்கே, ராகுல், பிரியங்கா தமிழ்நாடு வர உள்ளார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணி' எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.