மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.23 லட்சம் கனஅடியில் இருந்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!
By : King24x7 Rafi
Update: 2024-07-28 13:40 GMT
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.23 லட்சம் கனஅடியில் இருந்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 99 அடியாக இருந்த நிலையில் இன்று 107 அடியாக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.