டெல்டா, தென் மாவட்டங்களில் 2வது நாளாக கனமழை - 50,000 மீனவர்கள் வீடுகளில் புகுந்த மழை நீர் !
நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூர், திருக்குவளை பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 2 ஆயிரம் ஏக்கர் பின்பட்ட குறுவை மற்றும் தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 12,500 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் 500 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த 4 நாட்களாக மழைநீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசலில் 25 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 50,000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் ரூ.1 கோடிக்கு மேல் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டது.தொடர் மழையால் தீவு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.