உத்தரப்பிரதேச அரசின் ஒருதலைபட்சமான அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது: ராகுல்காந்தி
By : King 24x7 Desk
Update: 2024-11-25 06:19 GMT
ராகுல் காந்தி
உத்தரப்பிரதேச அரசின் ஒருதலைபட்சமான அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசின் அவசர நிர்வாக நடவடிக்கையே உயிரிழப்புகளுக்கு காரணம். இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே வேற்றுமையை உருவாக்க பாஜக அதிகாரத்தை பயன்படுத்துகிறது .