டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
By : King 24x7 Desk
Update: 2024-11-25 06:21 GMT
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.