சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது.;
Gold
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், நேற்று முதல் குறைந்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1190 அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. தங்கத்திற்கு போட்டியாக நேற்று முன்தினம் வெள்ளியும் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனையானது. இப்படியே விலை உயர்ந்தால் ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்க நகை என்பது எட்டா கனியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதே நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை வைத்து பார்த்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இதற்கு மாறாகவும், யாரும் எதிர்ப்பார்க்காத வகையிலும் நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ஒரு கிராம் ரூ.16,200க்கும், பவுனுக்கு ரூ.4800 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 600க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது கடும் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்த நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்தது. இதே போல நேற்று காலையில் வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.4.15 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று மாலையும் தங்கம் விலை குறைந்தது.