தக்கலை அருகே மோசடி புகாரில் பெண் கைது
தக்கலை அருகே மோசடி புகாரில் பெண் கைது செய்யப்பட்டார்.
Update: 2023-10-27 03:52 GMT
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே செங்கோடி பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (34). கட்டிட காண்ட்ராக்டர் ஆன இவருடன் கல்லூரியில் படித்தவர் அஜி என்ற சர்மிளா ( 32). அஜி திருமணம் ஆகி குமாரபுரம் பகுதியில் வசித்து வருகிறார் இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் கிங்சிலியிடம் தனது நகை அடகில் இருப்பதாகவும், ஏலத்தில் போக உள்ளதாகவும் கூறி அஜி கடன் கேட்டுள்ளார். இதையடுத்து கிங்ஸ்லி கூகுள் பே மூலம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி கொடுத்துள்ளார். ஆனால் பின்னர் அஜி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. கேட்கும் போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அஜி தலைமறைவாகியுள்ளார். விசாரித்த போது, பலரிடம் இதுபோல் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கொற்றிக்கோடு போலீசில் கிங்ஸ்லி புகாரளித்தார். போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தலைமறைவாக இருந்த அஜியை போலீசார் நேற்று கைது செய்தனர். தகவல் அறிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். தொடர் விசாரணையில் அஜி பலரிடம் பணம் ,நகை போன்றவை லட்சகணக்கில் வாங்கி ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.