கத்தார் சொகுசு விமானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசாக ஏற்க முடியுமா ? | KING NEWS 24X7

Update: 2025-05-15 13:09 GMT

அமெரிக்கா 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் இதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த பரிசை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனடர் ஆடம் ஷிஃப், அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவரும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டுத் தலைவரிடமிருந்து "எந்தவொரு பரிசையும்... எந்த வகையிலும்" ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News