உரம் தெளித்த விவசாயி வயலிலேயே விழுந்து பலி

உரம் தெளித்த விவசாயி வயலிலேயே விழுந்து பலி

உயிரிழந்த விவசாயி


மயிலாடுதுறை அருகே வயலில் யூரியா தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளி வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்

மயிலாடுதுறை அருகே கோடங்குடி நெடுமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (43). விவசாய கூலித் தொழிலாளியான இவர் வாசு என்பவரின் வயலில் இன்று வயலுக்கு யூரியா, பொட்டாஷ் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வயலிலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story