கரூரில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு காவல் துணைத்தலைவர்

கரூரில்,பாதுகாப்பு பணிகள் குறித்து திருச்சி சரக காவல் துணை தலைவர் பகலவன் ஆய்வு செய்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, திருவள்ளூர் மைதானத்தில் நாளை டிசம்பர் 3ஆம் தேதி, திமுக இளைஞர் அணி சார்பில், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான, உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இதற்காக பிரமாண்ட மேடையுன் கூடிய கூட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் திருச்சி சரக காவல் துணைத்தலைவர் பகலவன். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின் திருச்சி சரக காவல் துணைத்தலைவர் பகலவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Tags

Next Story