தருமபுர ஆதீன ஆபாச வீடியோ வழக்கில் மூன்று பேருக்கு ஜாமின்
கோப்புபடம்
மயிலாடுதுறை தருமபுர 27வது ஆதீனம் மாசிலாமணி தேசிய சுவாமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச ஆடியோக்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியும் அவரை கொல்ல முயற்சித்த வழக்கில், மயிலாடுதுறை போலீசார் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று வினோத், விக்கி, குடியரசு ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு நபர்களை கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
மற்ற ஐந்து நபர்கள் தலைமறைவாகியிருந்தனர் அதில் மார்ச் 15ஆம் தேதி மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்ச்சந்திரன் செஞ்சி அதிமுக மாவட்ட வழக்கறிஞர், அவர் பிப்ரவரி 26 ஆம் தேதியே தாய்லாந்து நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார். வழக்கில் உள்ள 4 நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.
சிறையில் உள்ள ஐந்து நபர்களும் முன் ஜாமின் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர் இதில் ஸ்ரீநிவாஸ் என்பவர் சென்ற மாதம் பினையில் சென்றார். அகோரம், வினோத், விக்னேஷ் குடியரசு ஆகிய நான்கு நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டது இதில் அகோரம் மயிலாடுதுறை கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற மூன்று நபர்களும் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வினோத் விக்னேஷ் குடியரசு ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறையும் மயிலாடுது நீதிமன்றத்தில் ஐந்து முறையும் ஜாமீன் கேட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று மூவருக்கும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி கலைவாணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் மூவரும் தினந்தோறும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உள்ளார். (மேற்கண்ட வழக்கில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் திருச்சி மத்திய சிறையில் உள்ளார். அவர் மார்ச் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் 90 நாட்கள் கழித்துதான் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஜூன் 15ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்படலாம் மேலும் இவ்வழக்கில் நான்கு பேர் தலைமறைவாகி உள்ளனர்)