பங்காரு அடிகளார் மறைவுக்கு தருமபுரம் ஆதினம் இரங்கல்

பங்காரு அடிகளார் மறைவுக்கு தருமபுரம் ஆதினம் இரங்கல்

தருமபுரம் ஆதினம்


பங்காரு அடிகளார் மறைவுக்கு தருமபுரம் ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பங்காரு அடிகளார் மறைவுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது சந்நிதானம் மாசிலாமணி சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேல்மருவத்தூர் திருத்தலம் பங்காரு அடிகளார் ஆட்சிகாலத்தில் உலகளவில் பெரிய சாதனைகளை செய்துள்ளது. பட்டிதொட்டியெங்கும், கிராமங்கள்தோறும் பக்தியை உருவாக்கி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் ஸ்தாபித்த திருக்கோயிலில் அனைவரும் சென்று வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தியுள்ளார்

இது சமயம் பரப்புவதற்கு மிகப்பெரிய சாதனமாக இருந்தது. நமது பக்தியின் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் நாம் சாதிக்க முடியாததை அவர் 20 ஆண்டு காலத்தில் பெரும்பாலானவர்களை ஆன்மீக வழியில் இட்டுச் சென்றவர். . கல்விப்பணியிலும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிகளை நிறுவியுள்ளார்.



மேல்மருவத்தூரில் ரயில் நின்று செல்லும் வகையில் சாதனை செய்தவர். மக்கள் மத்தியில் பக்தி எழுச்சியை ஏற்படுத்திய அவரது மறைவு ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


Tags

Next Story