பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,87,09,548-ல், ரூ.1,80,24,278 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,87,09,548-ல், ரூ.1,80,24,278- உரியவர்களிடம் ஒப்படைப்பு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எவரும் எடுத்துச் செல்ல கூடாது எனவும், அவ்வாறு எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது எனவும் அறிவிப்பு செய்தது. அதனை மீறி எடுத்துச் சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ரோந்து பணியில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஒரு கோடியே,87- லட்சத்து,09-ஆயிரத்து 548 ரூபாய் ஆகும். இது தொடர்பாக நான்கு சட்டமன்ற தொகுதியிலும் 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணத்திற்கு உண்டான ஆவணங்களை காட்டியவர்களுக்கு அவருடைய பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை ரூ. ஒரு கோடியே 80 லட்சத்து 24,278 உரியவர்களிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு, இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 124 வழக்குகள் பைசல் செய்யப்பட்டது. இன்னும் பைசல் செய்யப்படாத எட்டு வழக்குகள் உள்ளது. தற்போது வரை 6,85,270 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story