பெண்ணிடம் நகை பறிப்பு: குண்டர் சட்டத்தில் இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வெங்காய மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் கலா. கடந்த 2023 டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்ற போது, கரூர் மாவுடையான் கோவில் தெருவை சேர்ந்த ஐயா என்கிற பால்பாண்டி, வினோத் குமார், பாண்டியன் என்கிற பரணி பாண்டி மற்றும் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த கொடியரசு ஆகிய நான்கு பேரும் பதிவு எண் இல்லாத டூவீலரில் சென்று, கலாவின் கழுத்தில் இருந்த எட்டே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது தொடர்பாக, கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். இந்நிலையில் இந்த வழக்கின் எதிரிகளாக உள்ள ஐயா என்கிற பால்பாண்டி மற்றும் வினோத்குமார் ஆகிய இருவர் மீதும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின்படியும்,
இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அந்த உத்தரவை வழங்கினார். இந்த குற்ற வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குண்டர் தடுப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவிய கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன்,
காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.