கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட கருப்பு துரை சேர்ந்த கோபால் என்கிற கருப்பத்தூர் கோபாலை முன் விரோதம் காரணமாக அவரது தோட்டத்தில் வைத்து கொலை செய்த வழக்கில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கருப்பு துரை சேர்ந்த ராஜா, வயல் உரைச் சேர்ந்த சரவணன், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர் என்கிற மவுண்ட் பேட் சுந்தர், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ரவிவர்மன் என்கிற பாம் ரவி, திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற குமிழி ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி குமார் என்கிற கருப்பு குமார், திருச்சி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மனோஜ், கரூர் மாவட்டம் கம்பநல்லூரை சேர்ந்த சுரேஷ், கருப்பதுரை சேர்ந்த வினோத் குமார், திருக்காம்புலியூரை சேர்ந்த நந்தகுமார் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று நீதிபதி அளித்த தீர்ப்பில், ராஜா சரவணன் சுந்தர் என்கிற மவுண்ட்பேட்டை சுந்தர் ரவிவர்மன் என்கிற பாம் ரவி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் தலா 10,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கினர்.
இதே வழக்கில் தொடர்புடைய சுரேஷ் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை செய்த லாலாபேட்டை காவல் ஆய்வாளர், நீதிமன்ற ஆகியோருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.