கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - 8 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - 8 கிலோ பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்கள் 

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவர்களிடம் இருந்த 8 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லை. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது மாவட்ட எஸ்பி. மீனா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்பி மீனாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி லாமேக் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் மயிலாடுதுறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியசீலன்.33, காரைக்குடி பர்மா காலணியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் சீனிவாசன்.45. ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தலா 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மயிலாடுதுறை புது தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பங்காரு கிருஷ்ணன்.35, திருவிழந்தூர் காமராஜர் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வீரபாண்டியன்.26. ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை போலீசார் கைப்பற்றிய கஞ்சாவில் இதுவே அதிக எடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

Tags

Next Story