ஆதீனத்திடம் மிரட்டி பணம் கேட்ட வழக்கில் 9பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை தர்மபுர ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் 4 பேர் கைது செய்த நிலையில், 5பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை தருமைஆதீனத்திடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நபர்களை விடுவிக்க ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி கோரிக்கை வைத்ததாகவும் இந்த நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஒரு செய்தி வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வந்துள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு:

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள் சம்பந்தப்பட்ட வீடியோ தங்களிடம் இருப்பதாகவும். இது தொடர்பாக மடாபதியின் சகோதரரான விருத்தகிரி என்பவரிடம் ஆடுதுறையை சேர்ந்த ராமலிங்கம் மகன் வினோத், திருவெண்காடு சம்பாகட்டளையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்கி என்கிற விக்கினேஸ்வரன் (33), திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர், நெய்க்குப்பை, மெயின்ரோட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஸ்ரீநிவாஸ் (28), செம்பனார்கோயில் நெடுஞ்செழியன் மகன் குடியரசு (39) திருவெண்காடு இளையமதுகூடத்தை சேர்ந்த பிஜேபி கட்சியின் மாவட்ட தலைவர் அகோரம், செய்யாரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசந்திரன,

தருமபுரம் ஆதீனத்தில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த பிரபாகரன், தருமபுரம் ஆதீனத்தில் சேவகராக பணிபுரியும் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோர் விருதகிரியிடம் பலமுறை மிரட்டி பணம் கேட்டதாகவும், கொடுக்கவில்லை என்றால் வீடியோவை வலைதளத்தில் பரப்புவதாகவும் மிரட்டியதாகவும், விருதகிரி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் வழக்கின் எதிரிகள் வினோத்,

விக்னேஷ், ஸ்ரீவாஸ் குடியரசு ஆகியோர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தலைமறைவு எதிரிகளை தனிப்படை அமைத்து தேடப்பட்டுவருகிறது. என இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story