டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

மயிலாடுதுறையில் டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள்  ரூ. 40 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை

மயிலாடுதுறையில் டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள்  ரூ. 40 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை
, மயிலாடுதுறை பூக்கடை பகுதியில், கும்பகோணம் செல்லும் சாலை மாமரத்து மேடை பகுதியில் , பாரதிமோகன் என்பவர், டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். காலை வந்து கடையை திறந்த போது , பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மயிலாடுதுறை போலீசாருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் செல்வம் , சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ,கடையில் இருந்த மிக்ஸி , அடுப்பு , டீ பாய்லர் உள்ளிட்ட பொருட்களும் , 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும், மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story